God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
41
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்
ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனதெல்லாம்
வல்லமையுடனே வேண்டிக்கொள்வோம்
இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கி விடும்
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்
|