God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
35
கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்
இயேசு ராஜன் உயிர்ததெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் ஆ .. கீதம்
பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதி முன் - ஆ ஆ கீதம்
வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டவர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ ஆ கீதம்
அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பூதக் கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார் - ஆ ஆ கீதம்
வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் - நம்
மேள வாத்தியம் கைமணி, பூரிகை
ஏடுத்து முழங்கிடுவோம் - ஆ ஆ கீதம்
|