God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




267
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார்
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்

பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை

சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா , உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை

ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே , உமைப் பாடக்கூடுமோ
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா , எங்கும் கண்டதில்லை



© www.myjesus.in . 2014