God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
220
என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றுவார்
நெஞ்சின் நோவுகள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே
சிறகு ஒடிந்த பறவை
அது வானில் பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ
மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ
அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே
என் இதயம் இயேசுவுக்குத் தெரியும்
என் வேதனை இயேசுவுக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசென்னைத் தேறுவார்
|