God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
203
பேசும் தெய்வம் நீர்
பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
என்னைப் படைத்தவர் நீர்
என்னை வளார்த்தவர் நீர்
என் பாவம் நீக்கி என்னை குணமாக்கி
என்னோடிருப்பவர் நீர் -
இயேசுவே (4)
என் பாரம் சுமப்பவர் நீர்
என் தாகம் தீர்ப்பவர் நீற்
என்னை போஷித்து என்னை உடுத்தி
என்னோடிருப்பவர் நீர் -
இயேசுவே (4)
என்னை அழைத்தவர் நீர்
என்றும் நடத்திடுவீர்
என் மேல் கண் வைத்து ஆலோசனை தந்து
என்னோடிருப்பவர் நீர் -
இயேசுவே (4)
எனக்காய் வருபவர் நீர்
என் கண்ணீர் துடைப்பவர் நீர்
எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து
என்னோடிருப்பவர் நீர் -
இயேசுவே (4)
|