God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
175
விந்தைக் கிறிஸ்தேசு ராஜா
உந்தன் சிலுவை என் மேன்மை
சுந்தரம் மிகும் இந்தப் பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிக விருப்பினும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்
குரிய பெருமை யாவும் அற்பமே
உம் குருசே ஆசிக்கெல்லாம்
ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க இரத்த ஊற்றில் மூழ்கி
தூய்மையடைந்து மேன்மையாகினேன்
சென்னி விலா கை கானின்று
சிந்துதோ துயரோடன்பு
மன்னா இதைப் போன்ற கட்சி
எந்நாளிலுமே எங்கும் காணேன்
இந்த விந்தை அன்புக்கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்
|