God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
148
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்
கண் கொளாத காட்சியே
கண்டிடும் வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும்
நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை
நிச்சயமாய் தீர்த்தாரே
நோயற்ற உன்னையே நேயமாக அழைக்கிறார்
கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே
|