God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
144
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போது நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்செமெனே பூங்காவினில் கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே
என்னையும் உமைப்போல் ஆக்கிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எந்தனை தரை மட்டும் தாழ்த்துகின்றேன்
தந்துவிட்டேன் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
|