God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




142
அழகானவர் அருமையானவர் இனிமையானவர்
மகிமையானவர் மீட்பரானவர்
அவர் இயேசு இயேசு இயேசு

சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்
என்னுடையவர் என் ஆத்தும நேசரே

கன்மலையும் கோட்டையும் துருகமானவர்
ஆற்றித் தேற்றி காத்திடும் தாயுமனவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா
என்னுடையவர் என் ஆத்தும நேசரே

கல்வாரி மேட்டினில் கொல்கொதாவினில்
நேச இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா
என்னுடையவர் என் ஆத்தும நேசரே


© www.myjesus.in . 2014