God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




126
அருளின் மாமழை பெய்யும்
என்று வாக்களித்தோரே
மாரியாய்ப் பெய்திட செய்யும்
லோகத்தின் ரட்சகரே

தேவன்பின் வெள்ளம்
தேவன்பின் வெள்ளம் தேவை
கொஞ்சம் ருசித்த என் உள்ளம்
கெஞ்சுதே இன்னும் தேவை

கற்பாறை போல் பாவி உள்ளம்
கடினப்பட்டதையோ
பரிசுத்தாவியின் வெள்ளம்
கரைக்க வல்லதையோ

வெட்டாந்தரை நிலந்தானும்
ஏதேன் போல் மாறும் என்றீர்
சாபத்துள்ளான முட்பூண்டும்
கேதுருவாகுமென்றீர்

தேசத்தின் இருளைப் பாரும்
லோகத்தின் மெய்த்தீபமே
ஆவியின் அருளைத் தாரும்
மனமாற்ற வல்லவரே

ஏழை என் குறைகள் யாவும்
தீர்த்திடும் வல்லவரே
யுத்தத்தில் முன் செல்ல ஏவும்
சேனைத் தள கர்த்தரே


© www.myjesus.in . 2014