God does extraordinary things for ordinary people
God does extraordinary things for ordinary people
Tamilsongindex


தமிழ் பாடல்கள்




117
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே - பாவி

காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளி
காசுக்காகவே கர்த்தர் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை - பாவி

கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுங்காயமும் அடைந்தாரே -பாவி

கால்கள் கைகள் ஆணிகள் பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதை காணும் உள்ளம் தாங்குமோ - பாவி

உலகத்தின் இரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உன்னை கைவிடார்
தளராமல் நம்பி ஒடி வா - பாவி

பாவ சாபங்கள் தீரா வியாதிகள்
பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்
கண்டு நீ மனம் கலங்குவதேன்
கர்த்தர் இயேசுவண்டை ஓடி வா - பாவி

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
வாருங்கள் என்னண்டையில் என்கிறார்
இளைப்பாறுதல் தரும் இயேசுவை
இன்று தேடி நாடி நமபி வா - பாவி


© www.myjesus.in . 2014