God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
110
இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்
மகிழ் கொண்டாடுவோம் (2)
போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்த்தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க
அதி காலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட
பரி சுத்தனை அழிவு காண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்
இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்
|