God does extraordinary things for ordinary people
தமிழ் பாடல்கள்
108
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2)
உவர் நிலமாக இருந்த என்னை
விளைனிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)
தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களிம் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)
உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் எங்களை ஏற்றுக் கொள்வீரே
நோயிலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய்ப் பாடுவேன் நன்றி (2)
|